பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

என்னவளுக்காக




சுவாசம்..

உன்வாசம் 
இல்லாமல் 
என் சுவாசம் 
இலலை.


முத்துக்கள்...
 
என்னவளின்
கால்கொலுசு 
முத்துக்கள்...  
வானில் நட்சத்திரங்கள்.


காதல் பட்டம்..

கணிதத்தில்
பட்டம் பெற  
நினைத்த என்னை 
காதலில் பட்டம் பெற 
வைத்தவள் நீ... 

சனி, 24 செப்டம்பர், 2011

பட்டாம்பூச்சிகள்



சில நாழிகைத்தான்
நீ என்னை
கடந்து சென்றாய்,
அதற்குள் இத்தனை
பட்டாம்பூச்சிகள் 
சிறகடிக்கின்றன
என் இதயத்தில்............!         


வியாழன், 15 செப்டம்பர், 2011

தேவதை



நீ பச்சை நிற
பாவடை தாவணி
உடுத்தி,
உன் சிகப்பு நிற
சைக்கிளில் வருவதுதான்
நம்ம ஊர்
அம்மன் வீதி உலா....


புதன், 14 செப்டம்பர், 2011

தேவதை நாடு



எல்லோருக்கும்
தாய்நாடு என்று
ஒன்று இருப்பது போல்
எனக்கும் இருக்கிறது
தேவதை நாடு என்று 
நீ வசிக்கும் இடத்தில்

திங்கள், 12 செப்டம்பர், 2011

மச்சம்





வெண்ணிலவும்
பொறாமைப்பட்டது
உந்தன் உதட்டிற்கு 
மேல் உள்ள 
அந்த அழகான 
மச்சத்தை பார்த்து...